Sunday, 22 February 2015

கடவுள் பயம் தேவையா?

மனிதன் எதனையும் பலனை எதிர். பார்த்து வாழ்பவன் கண்ணால். காண்பவைகளையே நம்புகிறவன். காணாமல் நம்பிக்கை வைப்பது கடவுளையே.காரணம் மூதாதையர். பெற்றோர்கள் என்று நம். பிள்ளை பருவம் முதல் கடவுள் பயம் ,பக்தி என்று மூளை சலவை செய்து விடு-கின்றனர் எனவே நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றது.கடவுள் பயம் என்பது இப்பொழுது அதிபுத்திசாலிகளும் உபயோகிக்கும் வார்த்தைகள் ஆகி விட்டது.நீ நம்பிக்கை வைப்பது எந்த கடவுளாகவுமிருக்கலாம் ,பக்தி கதை களை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை,ஆனால் கலாச்சார முறைகளில் வாழ வேண்டும் ,கடவுள் பயம் கண்டிப்பாக இருக்கவேண்டும் .ஆனால் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ள போது எதை கடைபிடிப்பது என்பது இவர்களின் குழப்பம்.கடவுள் பயம் என்றிருந்தால் தான் மனிதர்களிடம். ஒழுக்கமிருக்கும் என்று நினைப்பவர்கள் ,ஆனால் இதை வைத்து ஏமாற்று-பவர்களும்,ஏமாறுபவர்களும் உரு-வாக்கப்படுகிறார்கள் என்பதை மறந்தவர்கள்,உலகில் எந்த ஆதரவும் இல்லை,கடவுளே தங்களுக்கு ஆதரவு என்று நினைத்து வாழ்ந்து தங்களிடம் மீதமுள்ள உடமைகளை-யும் ஏமாற்றமடைந்து  சாவின் விளிம்பிற்கே செல்பவர்களையும் ஏமாற்றி பிழைக்கும் பிணம் தின்னி கழுகுகளும் கடவுள் பயத்தை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்ற -னர்.இதனால் ஆதாயம் சில பேருக்கு அழிவுகள் பலபேருக்கு என்பதால் கடவுள் பயம் தேவையற்றது என்று கூறுகிறேன் .இவற்றை தடுத்து. விட்டால் கடவுள் பெயரால் ஏமாற்றப்-படுபவரை தடுக்கமுடியும்.இவ்வாறு இல்லாமல் தவறு செய்தால் கடவுள் தண்டனை கொடுப்பான் என்று சொன்னாலோ இவர்களுடைய பயத்தால் தடுக்கமுடியாமல் போனாலோ இவர்களுடைய கையால் ஆகாத செயலுக்கு கடவுள் என்று பெயர் வைத்த பொருளாகும் .தவறுகள் தொடர்ந்து செய்பவன் பிழைக்கத்தெரிந்தவன் ஆகிறான். நியாயத்தை கூறுபவர்களை ஏமாளி. ஆக்கி விடுகிறார்கள்,கடவுள் பெயரைக்கூறி தீமைகளை அதிகமாக்கி விட்டார்கள் .நியாயம் ,நன்மை. என்பது மிகமிக குறைந்து விட்டது இவைகளெல்லாம் கடவுளுக்கு தெரியவில்லையா?இறங்கி ஏன் வருவதில்லை?இல்லாதவராக இருக்கின்ற காரண-த்தால் இறங்கி வர இயலவில்லை, இல்லை இருந்தும் கண்டும் காணாது  இருக்கிறார் என்றால். கடவுளை இழிவுபடுத்துபவர்கள் உங்களை விட வேறு யாரும் இருக்க முடியாது பணவசதியில்லாமல் வாழும் ஒருவனிடம் நாம் அவனிடம் பணமில்லை என்று கூறுவது குற்ற-மில்லை,ஆனால் இல்லாதவனிடம் பணம் உள்ளது கேட்டால் கொடுப்பான் என்றால் அவனை ஏளனம் செய்வதாகும்.அவனிடம் பணம் உள்ளது என்று கேட்பவன் எவ்வாறு ஏமாற்றம் அடைகிறானோ அது போல நாம் உள்ளோம்.கேட்கச் சொன்னதாக மதவாதி உள்ளான். ஆக இல்லாதவனிடம் பணம் உள்ளது என்று ஏமாற்றுவதைப் போல இல்லாத கடவுளை வைத்து ஏமாற்றுகின்றனர்..                            மனிதர்களை குறை கூறி சில மனிதர்கள் வளர்த்தவைகள் தான் கடவுள்களும் குட்டிதெய்வங்களும், வாழும் பொழுது மனிதன் என்று கூறிக்கொண்டும் ,அவன் மறைந்த பிறகு அவனை தூதராகவும்,கடவுளாகவும் வைத்து பிழைக்கும் கூட்டமே மதவாதிகளின் கூட்டம் ,இயற்கைக்கு மாறாக கடவுள் மட்டுமல்ல தீயசக்திகள் என்று கூறு-பவகைகளும் உள் அடங்கியவைகளே ,(பேய்,பிசாசு,பில்லி,சூன்யம்,மாயம், மந்திரம்)என்று இல்லாதவைகளை உள்ளவைகளாக ஏற்றுக்கொண்டதன் ,ஏற்படுத்தியதன்,விளைவாக இருளை கண்டே பயப்படக்கூடிய-வர்களாக மனதளவில் எல்லோரை-யும் அச்சம்கொள்ளவைத்து விட்டனர் இந்த பயத்தின் காரணமாக மனோ-ரீதியாக பாதிக்கப்பட்டு குணமாவ-தற்க்காக. எந்த மதம் என்றும் பாராமல் கோயில்,மசூதி,சர்ச், என்று போவதற்கு காரணம் என்ன? தீய சக்தி என்று. ஏற்றுக்கொண்டதன் காரணமாக,அதிலும் இளம் பெண்களாக உள்ளவரே. அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.  பயந்ததன் விளைவாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டு மனம் போன போக்கில் இவர்கள் தன்னை மறந்து சுயசிந்தனை இழந்து கற்பனை உலகிற்கு மூளையின் செயல்பாடு. அதிகமாக ஈடுபடும்,பல முனைகளாக சிந்தனைகள் மாறுபடும் இவைகளால்.ஏற்படும் மன அழுத்தம் மனப்போராட்டமாக ஏற்படும் பாதிப்புகளாகும் .ஆகவே இவர்கள் நல்ல நிலையில் உள்ள பொழுது நல்ல படியாக அன்புகோர்த்து ஆதரி-த்து மனம் கோணமல். நடந்து.   நல்லவைகளை மனதில் பதிவு செய்து,அதே போல் நல்லசக்தி என்று ஏற்கெனவே மனதில் உள்ள,அறிந்துள்ள கடவுளின் மகிமையை உதாரணம் காட்டி, ஊக்கம் கொடுத்து மனதளவில் ஏற்பட்ட பயத்தை மன அழுத்தத்தை சிறுக,சிறுக,மறைய செய்வதால் குணமடைகிறார்களே அல்லாமல் இவர்களை நேரடியாக பேய் வந்து அடிக்கவுமில்லை,கடவுள் வந்து காக்கவுமில்லை.இதைத்தான் மருத்துவ மனைகளில் மனோத்த்துவ முறையில். உரிய சிகிச்சைக்கு பின் -விளைவுகளில்லா வண்ணம் குண-மடையச்செய்கின்றனர்.அதே முறையில் தான் மதரீதியான பிரார்த்தனை நடக்கும் இடங்களில். மாற்றம் பெறுகின்றனர். என்றாலும் இவர்களை துன்புறுத்துவதன். விளைவாக நலம் பெறக்கூடியவர்-கள் கூட மேலும் அதிகரித்து தீராத அளவிற்கு விட்டுவிடுகின்றனர்.    ஒவ்வொரு. உயிரும் தன்னுயிரை காக்க உடல் மூலமாக ஏற்படும் முன்னெச்சரிக்கையின் அறிகுறியே. அச்சம்,பயம்,என்பதாகும்.இவை மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு. பிறந்த குழந்தைக்கும் உண்டு.இவர்கள். வளர வளர தைரியத்தை ஊட்டி வளர ச்செய்வது தான் பெரியவர்களின் கடமையே அல்லாமல் அச்சத்தை ஊட்டி வளர செய்வது மிருகங்கள் கூட செய்வது கிடையாது.ஆத்மா என்பது எது?பிறக்கும் பொழுது சிசுவின். உடலில் சென்று விடுவதும்,விட்டுபிரியும் பொழுது,உயிர் பிரிந்து விடுவதுமாக. கூறப்படுவதுமாகும்.அதாவது கை,கால்களைத்தவிர எந்த குறையு-மில்லா ஒரு உடம்பினுள் இருப்பது தான் ஆத்மா என்கிறார்கள்.அந்த உடம்பினுள். ஏதாவது பிழை ஏற்பட்டால்,செயல் இழந்தால்,அந்த பிழையை சரி செய்து அந்த உடலிலேயே தங்கலாம் என்ற அறிவு எல்லாம் அந்த ஆத்மாவுக்கு இல்லை மாறாக கோபம் கொண்டு சென்று,இந்த நாள் வாழ்ந்தோம் என்ற நன்றி. விசுவாசமில்லாமல், அந்த உடலை பூத உடலாக்கி செல்வதாக. காலம் காலமாக கூறப்படுவதாகும்.அதாவது மின்விசிறிகள் உள்ளது,அதில் இறகு,காயில்,பேரிங்,மற்றும் இதர சாதனங்கள் ,மின்சக்தி,எல்லாம் சேர்ந்தால். இயங்கக்கூடிய சக்தி கிடைக்கின்றது .அப்படி என்றால் ஆத்மாவை இந்த இயந்திரத்தில். மனிதர்கள் புகுத்துகின்றனரா? ஆக இயந்திரத்தில். மின்சக்தி,இதர சாதனங்கள் ஒன்று சேர்ப்பதனால் ஒருசக்தி தோன்றி தானாக இயக்கம் பெறுகின்றன.அதுபோல தானியங்கி என்ற மனித உடலில் ,தானாக உருவாக்கி இனைந்து ,வளரந்து ஒரு சக்தியை உருவாக்கி அந்த உயிரை இயக்கவும் ,ஏதாவது பழுதுபட்டால் தன்னால் முடிந்த வரை சரி செய்ய முயன்று,முடியாத தருவாயில் தன் சக்தியை இழந்து,வெளி உயிரை மரணம் என்று மனிதர்களை கூற வைத்து அவ்வுடலுடன் தானும் மரணம் அடைகிறது.

No comments:

Post a Comment