Sunday, 1 March 2015

சத்தியம்,மனசாட்சி

சத்தியம் என்பது தெய்வ நம்பிக்கை-யால் வருவது ,கடவுள் மேல் உள்ள
பயத்தால் வாக்கு மாறாமல் ,நடத்தை
மீறாமல் காப்பாற்றுவது ,இன்றுள்ள
மனிதர்கள் ஒரு சதவீதமாவது
இருப்பார்களா?என்பது சந்தேகமே
இதே கடவுள் மேல் அவநம்பிக்கை-யால்,வாழும் ஒருவனிடம் சத்தியத்தை எதிர் பார்த்தால்,
அவனும் கடவுள் நேரில் வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம்
என்று,மீறி நடந்தால் இச் சத்தியம்
கேலிக்குறியாகி விடுகிறது.இன்று
ஒவ்வொரு மனிதர்களும் சந்திக்கும்
நிலையே இது.

மனசாட்சி என்பது ஒவ்வொரு மனித-னுக்கும். உள்ளது என்றாலும்,
ஒவ்வொருவரின் பாதிப்பு,பாதிப்பு
இல்லா,தன்மைக்கு தகுந்தவாறு
காணப்படுவதாகும்.இவை சமூகத்-தவர்களை. கண்டு கொள்ளாது,
குறைவான பாதிப்புகளை கொண்டோர் மனசாட்சி மிகுதியாக-உள்ளோராகவும்,பாதிப்புகளை
அதிகமாக கொண்டோர் மனசாட்சி
குறைவு உள்ளோராகவும் தோன்றுவர்.இதில் எவ்வகை பாதிப்பு்
-களை கண்டாலும், அதை மற்றவர்-களுக்கு நேரக்கூடாது என்று நினைத்து வாழ்வது,என்பது.    எல்லா விதமான
மக்களின் பகையையும்,கடவுள் எனும் பெயரை எதிர்க்க துணியும்
தண்மையும்,தன் உயிரே போனாலும்
மற்றவர்களுக்கு இவ்வகையான
தன்மைகள் நிகழக்கூடாது என நிலை எடுக்கும் ஒருவனால் தான்
இத்தகைய துணிவான முடிவு
எடுக்க முடியும்.


ஒருவன் சிறு தவறு செய்து விட்டத-ற்காக. நீ அவனை அடித்து விட்டால்
உன் மனசாட்சி உன்னை உறுத்தும்,
அதையே உன்னை ஒருவன் அடித்து
விட்டால் நீ. அவனை திருப்பி அடித்து
விட்டால் அது உன்னை உறுத்தாது.
ஆக இரண்டும் அடி தான் காரணம்
வேறு,வேறு அதனால் மனசாட்சி-யிலும் வேறுபாடு.கொலை என்பது
பெருங்குற்றம் என்றாலும் ஒரு
கொலையால் தன் குடும்ப நபரை
இழந்த ஒருவன் ,கொலை செய்தவனை இவன் கொலை
செய்தாலும் இவன் மனசாட்சி
உறுத்தாது,காரணம் பாதிக்கப்-
பட்டதனால் .ஆக மனசாட்சியை
வைத்து. நீதியையோ,
நேர்மையையோ கற்பிக்க முடியாது.
ஆகவே நீதியை பொதுவாக வைத்து
பாதிக்கப்பட்டவன் பாதிப்பிற்குள்-ளாக்கியவனை ,தண்டிக்காமல்
பெருகாமல் இருக்க ,பாதிக்கப்-பட்டவன். சார்பாக ,தண்டிப்பது
தண்டனை என்று சமூகம் உருவாக்கியது.ஆனால் சமூகம்
பாதிப்பிற்குள்ளானவர்கள் சார்பாக
இல்லாமல் சாதகமாக மாறும்
தருவாயில் ,அல்லது கடவுள் பார்த்து
கொள்வார் என்று நழுவும் தருவாயில் நேர்மை சமூகத்தை
ஆளாது,மாறாக மனசாட்சி தான்
ஆட்சி செய்யும் அவரவர்களுக்கு
தகுந்தாற்போல்


மனிதன் இயற்கையான உணவிற்-க்காக விலங்குகளைதேடி அலைந்து
வேட்டையாடித்தான் வாழ்க்கையை
தொடங்கினான்.பிறகு நிலங்களை,
மரம்,செடி,கொடிகளை ,வளர்த்து,
மனித உயிர்களுக்கு ஆபத்தை
உருவாக்காத விலங்குகளை
அறிந்து ,அவைகளை தன்னுடனே
வளர்த்து ஒரு இடத்தில் இருந்து
வாழ பழக ஆரம்பித்தான்.அந்த
காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் தாய் வழி இனத்தவர்களே,தாயை வைத்தே
சொந்தமும்,அந்த தாயை வைத்து
உருவானவர்களே பந்தங்கள் ,
உறவு முறை என்று கூறிக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்,
தந்தை என்று எவரும் உரிமை
கொள்ளாத,உரிமை கொள்ள
முடியாத வகையில் வாழ்ந்த சமூகம்.


பின்பு வந்த காலங்களில் வீரம் என்பதை திறமையாகவும்,தகுதியா-கவும் உருவாக அதன் விளைவாக
வீரம் நிறைந்த ஆண்கள் ஆளுமை-யில் நிலம் ,மரம்,விலங்கு, என்று
வெற்றி பெற்றவன்தனி உடமையாக
சொந்தமாக்கிக்கொள்ள ஆரம்பித்தான் . போட்டிகள் அதிகமாகி ஆண்களுக்குள். கொலை,கொள்ளை,அதிகமாகி இதன் விளைவாக சமுதாயத்தை
கட்டுப்படுத்த தலைவன் என்று உருவான பின்பு தான்
பெண்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு
வீரம் நிறைந்த ,பொருள் நிறைந்த
ஆண்களும், தங்களுக்கு பிடித்த
பெண்களை பொருள் கொடுத்தும்
மிரட்டியும்,பணிய வைத்து
சொந்தம் கொண்டாடி அவள் மூலமாக தன் வாரிசை தக்க வைத்து
கொண்டு, தனக்கு பின் தன் ஆண்
வாரிசை தலைவனாகவும் மன்னன்
ஆகவும் ஆளவைத்தனர்.தனக்கு பிறக்கும் பெண்ணை பிற ஆண்கள்
கூடுவதை விரும்பாத தந்தை
வர்க்கம் ஆண்களையும் பொருள்
கொடுத்து வாங்கி பெண்ணின்
உடமையாக்கி வைத்தனர்.இவ்வகை
-யில் பொருள் கொடுத்து பெறப்பட்ட
ஆணும்,பெண்ணும் வேறு துணை
-களிடம் இணைய அனுமதியில்லை,
அதாவது ஆணிற்க்கு எத்தனை
பெண்களிடம் அவன் இணை
சேர்ந்தாலும்,அவன் அங்கீகரித்து
வைத்துள்ள பெண்ணிற்கு
பிறக்கும் குழந்தையையே. தன்
குழந்தை என எண்ணத்தோனும்,
ஆனால் விலை போகும் ஆணிற்க்கு
அந்த உரிமையில்லை ,அந்த பெண்
விரும்பி அந்த ஆணோடு இணைந்து
குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,
மாறாக அவள் வேறு ஆண்களோடு
இணைந்து குழந்தை பெற்றுக்
கொள்ளலாம். ஆனால் தந்தை
என்ற பெயர்,பொருள் கொடுத்து
பெற்ற ஆணையே சேரும்.
ஆகையால் சுதந்திரமாக வாழ்ந்த பெண்கள் இனம்,இவ் வகை
அடிமை தனங்களை. கண்டு
மிகவும் அச்சம் கொண்டு,இவ்வகை
ஆண்களின் கண்களில் அகப்பட்டு
விடாமல் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான காலகட்டத்தில் தான்
கடவுள்களின் பெயர்களை கூறி
நேர்வழி படுத்துவதற்காக
மறைநூல்கள். எனும் பெயரில்
திருமணங்களை கட்டாயமாகவும்,
அதற்கு பல தடைகள் கட்டுப்பாடுகள்
என உருவாக்கி,அதன் பின் இதே
போல பலபேர் பல கடவுள்களை
சட்ட திட்டங்கள். இடப்பட்டு,
அவைகளை பொருள் படைத்தவர்-களும்,மதகுருக்களும்,தங்களுக்கு
தகுந்தாற்போல் திரித்தும்,மறைந்து
சாதகமாகவும் தருணங்களில்,
இவைகளை அழிக்க வேறொருவர்
உருவாக,மக்களும் வெறுத்து
புதியவருக்கு ஆதரவு தர இணைய
என்று மறைந்த மதங்களும்
கடவுள்களும் பல உண்டு.அதில்
பிழைத்த மதங்களின் விளைவாக
கடவுள்கள் திருமணங்கள் தொடர்-
கதைகளாக வருகின்றன.அதில்
பெண்களுக்கு அவர்கள் மூலமாக
ஆண்களுக்கும் சோதனைகள்
தொடர்கின்றன.

No comments:

Post a Comment