Friday, 20 February 2015

உலகம் தோன்ற ஆதி மூலம் எதுவென்றால் சூரியன் தான் இது என்றும் கடவுளைப் போல் ஒளிந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றும் பொருளாக இருந்ததில்லை .உலகில் உள்ள எந்த உயிரும் பார்க்கும் வண்ணம் தன்னை வெளிப்படுத்தி உலகம் இயங்க உயிர் நாடியாக விளங்கி வருகிறது.இதுவே முதன் முதலாக தோன்றி மற்றவைகள் உருவாக காரணகர்த்தாவாக இருந்துள்ளது.இதிலிருந்து விலகி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவைகள் தான்மற்ற கோள்களும் ஆனால் எந்த கோள்களிலும் ஏற்படாத உருவாகாத திரவம் பூமியில் உருவானதின் விளைவால் மற்றும் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் சரியாக அமைந்து விட்டபடியாலும் காற்று தண்ணீராக. பரவி அதன் விளைவாக நுண்ணுயிர்கள் தோன்றி  அந்த நுண்ணுயிர்கள் பல வடிவங்களில் உருமாறியதன் விளைவாக ,அதாவது நுண்ணுயிர்கள் கூட்டு கலவையாகி பல உருவங்களாக உருவாகி பரிணாமங்கள் அடைந்தவைகளே .இவ்வகையாக தாவரங்கள் என்றும் உயிரினங்களாகும் மனிதயினமாகவும் தன்னைத்தானே வடிவமைத்து உருவாக்கி வெளிவந்து உயிரினங்களாக உலா வருகின்றன.                                       இந்த உலகம்.   உருவாக கடவுளே.  காரணம் அவரே எல்லாவற்றையும். உருவாக்கினார் என்பது மதவாதிகளின் கருத்தாகும்.அதா-  வது இதை இயக்க மாபெரும் சக்தி உள்ளவனால் தான் இதை இயக்க முடியும் என்று மனித அறிவைப் போலவே கடவுளும் அறிவை பயன் படுத்தி இயக்குகிறான் என்பது அவர்களின் நம்பிக்கை?எல்லாவற்றையும் உருவாக்க ஒரு மாபெரும் சக்தி (கடவுள் )வேண்டும் என்றால் அது மட்டும் எவ்வாறு ஒன்றுமில்லாமல். உருவாக முடியும்.அதாவது பலதையும் உண்டாக்க கூடிய ஒருவன் பலதையும் படைக்க கூடிய ,பலம் படைத்த ஒருவனுக்கு,அந்த பலத்தையும்,சக்தியையும் கொடுக்க அந்த சக்தியை விட பலம் கொண்ட சக்தி எது?அதற்கு விடை இல்லை, தேவை இல்லை என்பது அவர்களின் கருத்து ஆக முதலில் இல்லை என்பதில் தொடங்கி தானாக கடவுள் உருவானார் என்பதில் ஆத்திகம் வாதிகளுக்கும் மாற்று கருத்து இல்லை,ஆனால் எதுவுமே இல்லாமல் ஒரு மாபெரும்  சக்தி கொண்ட ஒரு ஆற்றல் உருவாக சாத்தியக்கூறுகள் இல்லை என்பது அறிவியல் கூற்று,பால்வெளி அண்டங்கள் என மனிதனுக்கு தேவை இல்லாத அந்த மனிதனைப் படைத்ததாகவும் கூறப்பட்ட கடவுளுக்கும் தேவையில்லாத்தாக. கருதி மனிதர்களிடம் கூறாது, கடவுளை வைத்து விவாதம் செய்வது மனிதன்,கடவுளும் அறிவுரை வாழ்வியல்விதிகள் என்று மனிதனு-க்கு மட்டுமே விதிக்கிறான் . சொர்க்கம்-நரகம் என்று மனிதர்களை மிரட்டுகிறான் ஏன்?மனிதனை மட்டும் சிறந்ததாக ஏன்படைக்கிறான். மற்றவைகளை. மனிதனை விட கீழாக படைத்ததால். கடவுளுக்கு என்ன மனநிறைவு கிடைத்து விட்டது.என்றால் நிச்சய-மாக கடவுள் எனும் பேருக்கு இல்லை மாறாக கடவுள் எனும் பெயரை வைத்து . மனிதன் தனக்கு தானே உயர்வாக நிலைநிறுத்திக்கொள்கி-றான் .பூமிக்கு ஆதரவு சூரியன் நமக்கு ஆதரவு இந்த பூமி,இந்த பூமியை விட்டு வேறு கோள்களில் நமக்கு உண்டான காற்று இல்லை,உணவு இல்லை, நாம் உரையாட மனிதர்கள் இல்லை என்றாலும் நமக்கு தேவையில்லாத -வைகளாகயிருந்தும் நமக்கு எந்த நன்மைகளும் செய்யாமலே சுழன்று கொண்டு தான் இருக்கின்றது.நம் பூமிக்காவது நன்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.நமக்கு கடவுள் தேவை என்றால் மற்ற கோள்களுக்கு எதற்கு கடவுள் தேவை,மற்ற கோள்களுக்கு கடவுள் தேவையில்லை என்றால் நம் பூமிக்கு. மட்டும்,அதுவும் மனிதர்களு-க்கு மட்டும் கடவுள் தேவை என்பது மனிதர்கள் உண்டாக்கிய சதியே-அன்றி வேறில்லை.                        இயற்கை என்பது ஒரு சுழற்சி. ஒரு இயக்கம்.ஒன்று இயக்குவது,மற்-றொன்று தானே இயங்கி கொள்வது இயற்கை தன்னால் உருவான ஒரு பொருளையும் தானாக உருவாகும் தன்மையை கொடுக்கும்,அது சரியாக உருவாகியிருக்கிறதா?அல்லது தவறி விட்டதா என்று கடவுள் கவனித்துக்கொன்டுள்ளது என்று மதவாதிகள் கூறுவது போல்,இயற்கை செய்யாது,அறியாதது ,ஒன்றினால் ஒன்று உருவாகி பல்கி பெருகி சிறிய உயிரினம்,பின் கூட்டு கலவையாகி பெரிய உயிரினமாக விளங்குகிறது ,சிறிய உயிரினமாக உள்ள போது இனவிரு-த்தி அதிகமாகவும் பெரிய உயிரினமாக உள்ள போது இன் விருத்தி சிறிய அளவிலும் செய்து உணவுகளாக ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வழி செய்து கொண்டு வளர்கிறது,இதில் தாவர உயிரினம் மிகச்சிறிய ,சிறிய ,அதை விட பெரிய,என்று பலவகை அளவிலும் உயரம்,காலம் என தனக்குள்ளே ஒரு வரைமுறை வகுத்துக்கொண்டு வாழ அந்த உயிரை பயன்படுத்திக்கொள்-கிறது.இதில் புறவழி அறிதல் சிறிது அதிகமாக மனிதன் இருந்த காரண-ந்தால் அதை வைந்து தன்னைத்தானே ஒவ்வொரு வழிகளையும் அறிந்து அதில் சிறிது சிறிதாக விலங்கினத்திலிருந்து விலகி முன்னேற வழிகளையும்,வழி-முறைகளையும் அமைந்துக்கொண்-டான்.                                                 ஆரம்பகாலத்தில் தோன்றிய உயிரினங்கள் தோற்றங்கள் உடலமைப்பு அவற்றின் இயக்கங்களின் தன்மைக்கு ஏற்ப வாழ்நாட்களை ஆயுளாக கொண்டன .அவ்வாறு தோன்றிய உயிரினங்கள் ஆண்-பெண் என்ற இரு இனங்களாகத்தான் தோன்றியது என்றும் கூறமுடியாது.ஒரே இனமாக இருந்து தானே கருவுற்று,பெற்று,வளர்த்து,பின் வந்த காலங்களில் அவைகளுக்கு இரண்டு இனங்களாக பிறந்து பின் வளர்ந்து இனச்சேர்க்கை. செய்து வளர்ந்த இனங்களாகியிருக்கின்றன இன்றுள்ள தாவரங்கள் மண்புழுக்-கள் துணையின்றி. தன் இனப்பெரு-க்கம் செய்கின்றன.தாயும் ,தந்தை-யும் அதுவே வரும் காலங்களில் இவைகளும் இரு இனங்களாக பிரியலாம்  ,பிரியாமலுமிருக்கலாம் கூறமுடியாது.ஆக ஆண் துணை தேவை ஏற்படாத வகையில் பெண் வடிவிலான உயிரினங்களாகத்தான். உலகில் முதன் முதலாக தோன்றி இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.

No comments:

Post a Comment