Tuesday, 3 March 2015

மதம் மனிதனுக்கு தேவையா?

அக் காலத்தில் மன்னராட்சி முறையில் உருவாக்கப்பட்ட குடும்ப முறைகளை சார்ந்து ,அதனை வைத்து மதங்களும் தங்களுடைய
 குடும்பமுறைகளில் சட்டங்களை
புகுத்திக்கொண்டதின் விளைவாக
வழிவழியாக வந்த மன்னர் வம்சங்-களும் அவர்களுக்கு சாதகமான
முறையில் பல மதங்களிலும் குடும்ப
முறைகளிலும் சட்ட திட்டங்களும்
சாதகமானவைகளாக கையாளப்-
பட்டன.பாதகமாக உருவாக்கும்
மத தோற்றுவிப்பவர்களை உயிர்
சேதம் செய்ய தயங்காத மன்னர்கள்
இருந்ததே இதற்கு காரணம்.
ஆக மன்னர் வம்சங்கள் அதற்கு
துணை போன மதங்கள் இவை தான்
காலங் காலமாக நாம் கண்ட வழி
முறைகள்,இதன் காரணமாக வம்சாவளி அதிகாரம்,பரம்பரையாக
செல்வங்களை தக்கவைத்துக்
கொள்ளும் உரிமை,அதற்கு
பாதுகாப்பு என மன்னர்களை
ஆதரித்து மதங்களும் ,மதங்களை
ஆதரித்து மன்னர்களும்,இல்லாத-வர்களை சார்ந்து இருக்கப்பட்டவர்-களாக வாழ்ந்து. இவ்வுலகை ஆளுமை செய்ய முடிந்தது.

மண்ணிற்காகவும் பெண்ணிற்காக-வும் நாடு பிடிக்கும் ஆசையில்
போரிட்ட மன்னர்கள் ஏராளம்
பலியான மக்கள் கோடானுகோடி
இந்த மன்னர்களின் கௌரவம்,
சிந்தனை,கொள்கைகள்,பாதுகாப்பு
போன்றவற்றை பாதுகாக்க பிறந்த-வர்களாகவே பொதுமக்கள்
வாழ்க்கை இருந்தது.இவ்வகையில்
ஏற்றதாழ்வுகளுடன் பிறக்க வைத்தது
மன்னரின் குடும்பத்தையும்,நாட்டை
காப்பாற்றுவதும் ஒன்று, என்ற
சிந்தனையையே கடவுளின் பெயரை
வைத்து மதவாதிகளை துணைக்கு
வைத்துக்கொண்டே பொதுமக்களை
ஆண்டுவந்தனர்.நீதி என்பது மன்னர்
வசமிருந்ததால் , இன்று உள்ளது
போல் பணம் வைத்துக்கொண்டு
நீதியை பெற தேவையில்லை,
மன்னனிடம் கைகட்டி ,காலில் விழுந்து வணங்கி முறையிட்டாள்
போதும் சபையை கூட்டி தீர்ப்பும்
கிடைத்து விடும்.அது குற்றவாளிக்கு
சாதகமா அல்லது பாதகமா என்று
கூற முடியாது,மன்னனுக்கு என்ன
தோன்றுகிறதோ அது தான் தீர்ப்பு,
அதை யாராவது தவறு என கூறினால் தலை துண்டிக்கப்படும் .
ஆக தீர்ப்பை தவறென்று கூறவோ ,
மேல் முறையீடு செய்யவோ வழி
இல்லாத ஒரு நபர் வம்சாவளி
அதிகாரத்தில் பிறந்த ஆட்சி அமைப்பு.இவ்வாறு பெருநிலமன்னர்
-கள் ,குறுநில மன்னர்கள் ,இந்து
மன்னர்கள்,இசுலாமிய மன்னர்கள்
என்று கடந்த 300- ஆண்டுகளுக்கு
முன்பு வரை அடிமைப்படுத்தி வாழ்ந்த வேலைகளில் இவர்களை
எதிர்த்து மக்களாட்சி வேண்டும்
என்று கேட்ட போரிட்ட மதவாதிகள்
உண்டா?இல்லை அந்த சுதந்திர
உணர்ச்சியை ஊட்டிய மதம் தான்
உண்டா?அல்லது மதவாதிகள் தான்
உண்டா? இல்லையே,இவர்களிடம்
மக்களாட்சி கேட்க முடியுமா?பெண்
உரிமை கேட்க முடியுமா? கேட்டாலும்
உயிரோடு இருந்தவர்கள் உண்டா?
ஓய்வூதியம் பெற்றவர் உண்டா?
விடுப்பு க்கு ஊதியம் பெற்றவர் உண்டா? மன்னரின் அதிகாரத்தில்
வாழும் ஊழியர்களிடமாவது
எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா?
ஆக இவையெல்லாம் எவ்வாறு
நமக்கு கிடைத்தன.உலகமெல்லாம்
தன் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும்
என்ற மண்ணாசையால் போட்டி
போட்டு உலக அழிவிற்கு வித்திட்ட
இரண்டாம் போருக்கு பின் அதுவும்
ஆங்கிலேய அரசு இருந்த படியாலும்
நம் நாட்டு தலைவர்கள் போராடி
பெற்ற சுதந்திரம்,அதன் மூலம்
உருவான சனநாயகம்.இதன்
விளைவாக மக்களாக இருந்தவர்கள்
பதவிகளை அடையும் வேளையில்
மதத்தை. சார்ந்தவர்கள் நுழைய
என்ன தகுதி,என்ன உரிமை இருக்கி-றது.மற்றும் தொழிலாளர்கள் வேலை
உரிமைகள் பெறப்பட்டு,மக்களாட்சி
சோசலிச கொள்கைகளை மறந்து,
அல்லது இன்றைய தலைமுறைகள்
பழைய வரலாறுகளை அறியாமலும்,மறைக்கப்பட்டும்
வளரும் காரணங்களாலும்,வெறும்
மத புராணங்களை கூறியே,வேற்று
மத வெறுப்புணர்வுகளை பரப்பி
அதில் தங்களுடைய கடவுள்களை
நிலைநிறுத்திக்கொண்டு ,கடவுளை
வழி படும் காரணங்களால் இன்று
தொழிலாளர் உரிமைகள் இழந்து
வேலை நேர நிர்னயமிழந்து,ஓய்வு-ஊதியங்களை இழந்து,வேலைகளை
-யும் இழந்து நிரந்தரமில்லா வேலை-
களை பெற்று,நிம்மதி இழந்து
இல்லாத கடவுளை நினைத்து வேதனையை தெரிவிக்க என
மீண்டும் மூடநம்பிக்கைகளை வளர்க்க,மீண்டும் அடிமைதனங்களை அரங்கேற்ற,
மீண்டும் மத ஆட்சி,மண்ணர்ஆட்சி
என,மக்களை சிறுக,சிறுக,மக்களை
மதவாதிகள் மாற்றி விட்டார்கள்
என்றால் நாம் மீண்டும் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
வாழ்க்கைக்கு சென்று விட்டால்
மீண்டும் இன்றைய நிலைக்கு
எந்த தலைமுறைகளும் திரும்ப
முடியாது என்பதை மட்டும்
நினைவு கொள்ளுங்கள்.

மதவாதிகள் என்றும் மன்னராட்சியை ஆதரிப்பவர்கள்,
மக்களாட்சியை வெறுப்பவர்கள்.
மக்களாட்சியின் பாதகங்களை
பெரிது படுத்தி,மன்னர் ஆட்சியின்
சாதகங்களை புகழ்வர்.இன்றுள்ள
நீதியைப்போல்,மன்னர்ஆட்சியில்
நிகழாது நீதி உடனே நிறைவேறும்
என ஆசை வார்த்தைகள் கூறுவார்-கள் ஆனால் மக்களின் பெரும்
பாலான நீதி மன்னர்களால் அநீதி-
களாகவே மாற்றப்படும் என்பதை மக்களிடம் மறைத்து விடுவார்கள்.
மத வாதிகளின் கொள்கையில்
மன்னனும் இருக்க முடியும் ஏழையாக மக்களும் இருக்க முடியும்
இதை விதி என்று மக்களின் தலை-யில். தட்டி அடக்கவும் மதவாதிகளு-க்கு தெரியும்.ஆனால் சனநாயக
நாட்டில் ஒவ்வொரு மனிதனின்
முன்னேற்றத்திற்கும் முயற்சி
எடுக்க வேண்டியது அரசின் கடமை
இதை விதி என்று விலகவோ,
அல்லது மக்களின் தலை எழுத்து
என தட்டிக் கழிக்க முடியாது.
சன் நாயக நாட்டில் கேள்விக்கனை
-கள் இல்லை என்றால் சனநாயகம்
இல்லை,மன்னராட்சியில். கேள்வியே. கேட்க முடியாது.ஆக
மக்கள் ஆட்சியில் மன்னனோ,
மன்னனின்அடக்குமுறை,ஆட்சி,
நீதி,போர்  ,போன்றவைகள் தேவை
இல்லை என்றானதோ,அது போல
மன்னர் கால குடும்ப முறைகளை
நாம் மாற்றவில்லை என்றால்,
மீண்டும்,மீண்டும்,மதவாதம் உயிர்
பெறும்,குடும்ப வாரிசு முறையாக
ஆட்சி அதிகாரமெல்லாம் உருவாக
தோன்றி ,வம்சாவளி. அதிகாரம்,
பின்பு மனிமகுடம்,அரச குடும்பம்
என பழைய நிலை உருவாகிவரும்.
வாழ்பவனை மரணத்தை நினைக்க
வைத்து,மரணம் அடைந்தோர்
பெயரை வாழ வைத்து ,வளர்வது
தான் மதம்.அதை உரிமையாகவும்,
முதலீடாகவும்,மாற்றிக்கொள்பவன்
மதவாதி,அவனுக்கு கீழ்படிபவர்கள்
மிகுதியாகும் போது,மத ஆதிக்க
வாதியாக மாறி,ஆட்சி ஏறி விடுகிறான்.

அன்று மன்னராட்சி காலத்தில் மாற்று வழி தேடி ஏங்கிய மக்கள் பலர் .அதே மக்களில் மன்னரில்லை
என்றால் ஆட்சி எவ்வாறு என்று
கேள்வி எழுப்பினார்கள் பலர்.
மன்னர் இல்லை என்றால் ஆட்சியே
இல்லை என்று மதவாதிகளின்
கூற்றில் மதிமயங்கி வாழ்ந்த,
மக்களின் வாயிலிருந்து
முடியாது,முடியாது,என்று ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து
வந்ததை அன்றே முடியும் என்று
நம்பிக்கை வைத்து அன்று சில
மனித மனங்களில் ஏற்பட்ட நம்பிக்கைகளுக்கு ஏற்ப நாம் இன்று
மக்களாட்சியில் வாழ்ந்து வருகிறோம்.அன்று பலர் முடியாது
என கூறியது பொய்யாகிவிட்டது,
சிலரால் முடியும் என்ற நம்பிக்கை
இன்று மெய்யாகிவிட்டது,ஆக பலரால் முடியாது என்று கூறி விட்டால் என்றென்றும் முடியாது
என்றாகி விடாது.இவ்வாறெல்லாம்
கிடைக்கப்பெற்ற நம் சனநாயகத்தை
மதம் எனும் பெயரால் மதவாதிகளின்
தூண்டுதலில் பின்னால் நாம் செல்வோம் என்றால் இழப்பு,நம்
மக்களாட்சியாகத்தான் இருக்கும்.

இன்று செல்வந்தனை. ஆதரிப்பதால்
சில இலவசங்களை கொடுத்து
இல்லாதவனை கவர செய்வான்
நாளை உரிமைகளை பறித்து உரிமை கூலியை இல்லாதவையாக
செய்து வயித்துக்கூலியாக(வெறும்
உணவு) கொடுத்து தன்னுடைய
வேலைகளை பெற்றுக்கொள்வான்.
மற்றும் திருமணம்,மரணம் இந்த
இரு காரணங்களுக்காக மத வாதி-களை தேடி மக்கள் செல்லும்
காரணங்களாலால் தனக்கு விரோதமாக நடப்பவர்களை பழி
வாங்கவும் ,ஆளுமை செய்யவும்
பயன்படுத்திக்கொள்கிறான்.
குடும்பம் என்பது மதவாதிகள்
குழப்பமான வழியில் உருவாக்கி
வைத்துள்ளதால். அவர்களிடம்
இருந்து விலகவும்,முடியாமல்
சேரவும் முடியாமல் சிக்கி தவிக்கும்
நிலை உருவாகிவிடுகிறது.

இன்று மக்களை அவர்களிடமுள்ள
ஓட்டுகளை வைத்து,மதங்களை
வளர்க்க,மத ஆட்சியை உருவாக்க,
மீண்டும் அடக்கியாள முயற்சிக்கின்-றனர் .மக்களே இவர்களிடம்
எச்சரிக்கையாக இருந்து மதங்களை
விரும்புகிறவர்களை தவிர்த்து ,மதத்தை விட மனிதத்தைநேசிப்-
பவனை தேர்வு செய்து நம்
சனநாயகத்தை காப்பது நமது
கடமையாகும் .

                                       






 .

Sunday, 1 March 2015

சத்தியம்,மனசாட்சி

சத்தியம் என்பது தெய்வ நம்பிக்கை-யால் வருவது ,கடவுள் மேல் உள்ள
பயத்தால் வாக்கு மாறாமல் ,நடத்தை
மீறாமல் காப்பாற்றுவது ,இன்றுள்ள
மனிதர்கள் ஒரு சதவீதமாவது
இருப்பார்களா?என்பது சந்தேகமே
இதே கடவுள் மேல் அவநம்பிக்கை-யால்,வாழும் ஒருவனிடம் சத்தியத்தை எதிர் பார்த்தால்,
அவனும் கடவுள் நேரில் வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம்
என்று,மீறி நடந்தால் இச் சத்தியம்
கேலிக்குறியாகி விடுகிறது.இன்று
ஒவ்வொரு மனிதர்களும் சந்திக்கும்
நிலையே இது.

மனசாட்சி என்பது ஒவ்வொரு மனித-னுக்கும். உள்ளது என்றாலும்,
ஒவ்வொருவரின் பாதிப்பு,பாதிப்பு
இல்லா,தன்மைக்கு தகுந்தவாறு
காணப்படுவதாகும்.இவை சமூகத்-தவர்களை. கண்டு கொள்ளாது,
குறைவான பாதிப்புகளை கொண்டோர் மனசாட்சி மிகுதியாக-உள்ளோராகவும்,பாதிப்புகளை
அதிகமாக கொண்டோர் மனசாட்சி
குறைவு உள்ளோராகவும் தோன்றுவர்.இதில் எவ்வகை பாதிப்பு்
-களை கண்டாலும், அதை மற்றவர்-களுக்கு நேரக்கூடாது என்று நினைத்து வாழ்வது,என்பது.    எல்லா விதமான
மக்களின் பகையையும்,கடவுள் எனும் பெயரை எதிர்க்க துணியும்
தண்மையும்,தன் உயிரே போனாலும்
மற்றவர்களுக்கு இவ்வகையான
தன்மைகள் நிகழக்கூடாது என நிலை எடுக்கும் ஒருவனால் தான்
இத்தகைய துணிவான முடிவு
எடுக்க முடியும்.


ஒருவன் சிறு தவறு செய்து விட்டத-ற்காக. நீ அவனை அடித்து விட்டால்
உன் மனசாட்சி உன்னை உறுத்தும்,
அதையே உன்னை ஒருவன் அடித்து
விட்டால் நீ. அவனை திருப்பி அடித்து
விட்டால் அது உன்னை உறுத்தாது.
ஆக இரண்டும் அடி தான் காரணம்
வேறு,வேறு அதனால் மனசாட்சி-யிலும் வேறுபாடு.கொலை என்பது
பெருங்குற்றம் என்றாலும் ஒரு
கொலையால் தன் குடும்ப நபரை
இழந்த ஒருவன் ,கொலை செய்தவனை இவன் கொலை
செய்தாலும் இவன் மனசாட்சி
உறுத்தாது,காரணம் பாதிக்கப்-
பட்டதனால் .ஆக மனசாட்சியை
வைத்து. நீதியையோ,
நேர்மையையோ கற்பிக்க முடியாது.
ஆகவே நீதியை பொதுவாக வைத்து
பாதிக்கப்பட்டவன் பாதிப்பிற்குள்-ளாக்கியவனை ,தண்டிக்காமல்
பெருகாமல் இருக்க ,பாதிக்கப்-பட்டவன். சார்பாக ,தண்டிப்பது
தண்டனை என்று சமூகம் உருவாக்கியது.ஆனால் சமூகம்
பாதிப்பிற்குள்ளானவர்கள் சார்பாக
இல்லாமல் சாதகமாக மாறும்
தருவாயில் ,அல்லது கடவுள் பார்த்து
கொள்வார் என்று நழுவும் தருவாயில் நேர்மை சமூகத்தை
ஆளாது,மாறாக மனசாட்சி தான்
ஆட்சி செய்யும் அவரவர்களுக்கு
தகுந்தாற்போல்


மனிதன் இயற்கையான உணவிற்-க்காக விலங்குகளைதேடி அலைந்து
வேட்டையாடித்தான் வாழ்க்கையை
தொடங்கினான்.பிறகு நிலங்களை,
மரம்,செடி,கொடிகளை ,வளர்த்து,
மனித உயிர்களுக்கு ஆபத்தை
உருவாக்காத விலங்குகளை
அறிந்து ,அவைகளை தன்னுடனே
வளர்த்து ஒரு இடத்தில் இருந்து
வாழ பழக ஆரம்பித்தான்.அந்த
காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் தாய் வழி இனத்தவர்களே,தாயை வைத்தே
சொந்தமும்,அந்த தாயை வைத்து
உருவானவர்களே பந்தங்கள் ,
உறவு முறை என்று கூறிக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்,
தந்தை என்று எவரும் உரிமை
கொள்ளாத,உரிமை கொள்ள
முடியாத வகையில் வாழ்ந்த சமூகம்.


பின்பு வந்த காலங்களில் வீரம் என்பதை திறமையாகவும்,தகுதியா-கவும் உருவாக அதன் விளைவாக
வீரம் நிறைந்த ஆண்கள் ஆளுமை-யில் நிலம் ,மரம்,விலங்கு, என்று
வெற்றி பெற்றவன்தனி உடமையாக
சொந்தமாக்கிக்கொள்ள ஆரம்பித்தான் . போட்டிகள் அதிகமாகி ஆண்களுக்குள். கொலை,கொள்ளை,அதிகமாகி இதன் விளைவாக சமுதாயத்தை
கட்டுப்படுத்த தலைவன் என்று உருவான பின்பு தான்
பெண்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு
வீரம் நிறைந்த ,பொருள் நிறைந்த
ஆண்களும், தங்களுக்கு பிடித்த
பெண்களை பொருள் கொடுத்தும்
மிரட்டியும்,பணிய வைத்து
சொந்தம் கொண்டாடி அவள் மூலமாக தன் வாரிசை தக்க வைத்து
கொண்டு, தனக்கு பின் தன் ஆண்
வாரிசை தலைவனாகவும் மன்னன்
ஆகவும் ஆளவைத்தனர்.தனக்கு பிறக்கும் பெண்ணை பிற ஆண்கள்
கூடுவதை விரும்பாத தந்தை
வர்க்கம் ஆண்களையும் பொருள்
கொடுத்து வாங்கி பெண்ணின்
உடமையாக்கி வைத்தனர்.இவ்வகை
-யில் பொருள் கொடுத்து பெறப்பட்ட
ஆணும்,பெண்ணும் வேறு துணை
-களிடம் இணைய அனுமதியில்லை,
அதாவது ஆணிற்க்கு எத்தனை
பெண்களிடம் அவன் இணை
சேர்ந்தாலும்,அவன் அங்கீகரித்து
வைத்துள்ள பெண்ணிற்கு
பிறக்கும் குழந்தையையே. தன்
குழந்தை என எண்ணத்தோனும்,
ஆனால் விலை போகும் ஆணிற்க்கு
அந்த உரிமையில்லை ,அந்த பெண்
விரும்பி அந்த ஆணோடு இணைந்து
குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,
மாறாக அவள் வேறு ஆண்களோடு
இணைந்து குழந்தை பெற்றுக்
கொள்ளலாம். ஆனால் தந்தை
என்ற பெயர்,பொருள் கொடுத்து
பெற்ற ஆணையே சேரும்.
ஆகையால் சுதந்திரமாக வாழ்ந்த பெண்கள் இனம்,இவ் வகை
அடிமை தனங்களை. கண்டு
மிகவும் அச்சம் கொண்டு,இவ்வகை
ஆண்களின் கண்களில் அகப்பட்டு
விடாமல் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான காலகட்டத்தில் தான்
கடவுள்களின் பெயர்களை கூறி
நேர்வழி படுத்துவதற்காக
மறைநூல்கள். எனும் பெயரில்
திருமணங்களை கட்டாயமாகவும்,
அதற்கு பல தடைகள் கட்டுப்பாடுகள்
என உருவாக்கி,அதன் பின் இதே
போல பலபேர் பல கடவுள்களை
சட்ட திட்டங்கள். இடப்பட்டு,
அவைகளை பொருள் படைத்தவர்-களும்,மதகுருக்களும்,தங்களுக்கு
தகுந்தாற்போல் திரித்தும்,மறைந்து
சாதகமாகவும் தருணங்களில்,
இவைகளை அழிக்க வேறொருவர்
உருவாக,மக்களும் வெறுத்து
புதியவருக்கு ஆதரவு தர இணைய
என்று மறைந்த மதங்களும்
கடவுள்களும் பல உண்டு.அதில்
பிழைத்த மதங்களின் விளைவாக
கடவுள்கள் திருமணங்கள் தொடர்-
கதைகளாக வருகின்றன.அதில்
பெண்களுக்கு அவர்கள் மூலமாக
ஆண்களுக்கும் சோதனைகள்
தொடர்கின்றன.

Sunday, 22 February 2015

கடவுள் பயம் தேவையா?

மனிதன் எதனையும் பலனை எதிர். பார்த்து வாழ்பவன் கண்ணால். காண்பவைகளையே நம்புகிறவன். காணாமல் நம்பிக்கை வைப்பது கடவுளையே.காரணம் மூதாதையர். பெற்றோர்கள் என்று நம். பிள்ளை பருவம் முதல் கடவுள் பயம் ,பக்தி என்று மூளை சலவை செய்து விடு-கின்றனர் எனவே நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றது.கடவுள் பயம் என்பது இப்பொழுது அதிபுத்திசாலிகளும் உபயோகிக்கும் வார்த்தைகள் ஆகி விட்டது.நீ நம்பிக்கை வைப்பது எந்த கடவுளாகவுமிருக்கலாம் ,பக்தி கதை களை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை,ஆனால் கலாச்சார முறைகளில் வாழ வேண்டும் ,கடவுள் பயம் கண்டிப்பாக இருக்கவேண்டும் .ஆனால் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ள போது எதை கடைபிடிப்பது என்பது இவர்களின் குழப்பம்.கடவுள் பயம் என்றிருந்தால் தான் மனிதர்களிடம். ஒழுக்கமிருக்கும் என்று நினைப்பவர்கள் ,ஆனால் இதை வைத்து ஏமாற்று-பவர்களும்,ஏமாறுபவர்களும் உரு-வாக்கப்படுகிறார்கள் என்பதை மறந்தவர்கள்,உலகில் எந்த ஆதரவும் இல்லை,கடவுளே தங்களுக்கு ஆதரவு என்று நினைத்து வாழ்ந்து தங்களிடம் மீதமுள்ள உடமைகளை-யும் ஏமாற்றமடைந்து  சாவின் விளிம்பிற்கே செல்பவர்களையும் ஏமாற்றி பிழைக்கும் பிணம் தின்னி கழுகுகளும் கடவுள் பயத்தை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்ற -னர்.இதனால் ஆதாயம் சில பேருக்கு அழிவுகள் பலபேருக்கு என்பதால் கடவுள் பயம் தேவையற்றது என்று கூறுகிறேன் .இவற்றை தடுத்து. விட்டால் கடவுள் பெயரால் ஏமாற்றப்-படுபவரை தடுக்கமுடியும்.இவ்வாறு இல்லாமல் தவறு செய்தால் கடவுள் தண்டனை கொடுப்பான் என்று சொன்னாலோ இவர்களுடைய பயத்தால் தடுக்கமுடியாமல் போனாலோ இவர்களுடைய கையால் ஆகாத செயலுக்கு கடவுள் என்று பெயர் வைத்த பொருளாகும் .தவறுகள் தொடர்ந்து செய்பவன் பிழைக்கத்தெரிந்தவன் ஆகிறான். நியாயத்தை கூறுபவர்களை ஏமாளி. ஆக்கி விடுகிறார்கள்,கடவுள் பெயரைக்கூறி தீமைகளை அதிகமாக்கி விட்டார்கள் .நியாயம் ,நன்மை. என்பது மிகமிக குறைந்து விட்டது இவைகளெல்லாம் கடவுளுக்கு தெரியவில்லையா?இறங்கி ஏன் வருவதில்லை?இல்லாதவராக இருக்கின்ற காரண-த்தால் இறங்கி வர இயலவில்லை, இல்லை இருந்தும் கண்டும் காணாது  இருக்கிறார் என்றால். கடவுளை இழிவுபடுத்துபவர்கள் உங்களை விட வேறு யாரும் இருக்க முடியாது பணவசதியில்லாமல் வாழும் ஒருவனிடம் நாம் அவனிடம் பணமில்லை என்று கூறுவது குற்ற-மில்லை,ஆனால் இல்லாதவனிடம் பணம் உள்ளது கேட்டால் கொடுப்பான் என்றால் அவனை ஏளனம் செய்வதாகும்.அவனிடம் பணம் உள்ளது என்று கேட்பவன் எவ்வாறு ஏமாற்றம் அடைகிறானோ அது போல நாம் உள்ளோம்.கேட்கச் சொன்னதாக மதவாதி உள்ளான். ஆக இல்லாதவனிடம் பணம் உள்ளது என்று ஏமாற்றுவதைப் போல இல்லாத கடவுளை வைத்து ஏமாற்றுகின்றனர்..                            மனிதர்களை குறை கூறி சில மனிதர்கள் வளர்த்தவைகள் தான் கடவுள்களும் குட்டிதெய்வங்களும், வாழும் பொழுது மனிதன் என்று கூறிக்கொண்டும் ,அவன் மறைந்த பிறகு அவனை தூதராகவும்,கடவுளாகவும் வைத்து பிழைக்கும் கூட்டமே மதவாதிகளின் கூட்டம் ,இயற்கைக்கு மாறாக கடவுள் மட்டுமல்ல தீயசக்திகள் என்று கூறு-பவகைகளும் உள் அடங்கியவைகளே ,(பேய்,பிசாசு,பில்லி,சூன்யம்,மாயம், மந்திரம்)என்று இல்லாதவைகளை உள்ளவைகளாக ஏற்றுக்கொண்டதன் ,ஏற்படுத்தியதன்,விளைவாக இருளை கண்டே பயப்படக்கூடிய-வர்களாக மனதளவில் எல்லோரை-யும் அச்சம்கொள்ளவைத்து விட்டனர் இந்த பயத்தின் காரணமாக மனோ-ரீதியாக பாதிக்கப்பட்டு குணமாவ-தற்க்காக. எந்த மதம் என்றும் பாராமல் கோயில்,மசூதி,சர்ச், என்று போவதற்கு காரணம் என்ன? தீய சக்தி என்று. ஏற்றுக்கொண்டதன் காரணமாக,அதிலும் இளம் பெண்களாக உள்ளவரே. அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.  பயந்ததன் விளைவாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டு மனம் போன போக்கில் இவர்கள் தன்னை மறந்து சுயசிந்தனை இழந்து கற்பனை உலகிற்கு மூளையின் செயல்பாடு. அதிகமாக ஈடுபடும்,பல முனைகளாக சிந்தனைகள் மாறுபடும் இவைகளால்.ஏற்படும் மன அழுத்தம் மனப்போராட்டமாக ஏற்படும் பாதிப்புகளாகும் .ஆகவே இவர்கள் நல்ல நிலையில் உள்ள பொழுது நல்ல படியாக அன்புகோர்த்து ஆதரி-த்து மனம் கோணமல். நடந்து.   நல்லவைகளை மனதில் பதிவு செய்து,அதே போல் நல்லசக்தி என்று ஏற்கெனவே மனதில் உள்ள,அறிந்துள்ள கடவுளின் மகிமையை உதாரணம் காட்டி, ஊக்கம் கொடுத்து மனதளவில் ஏற்பட்ட பயத்தை மன அழுத்தத்தை சிறுக,சிறுக,மறைய செய்வதால் குணமடைகிறார்களே அல்லாமல் இவர்களை நேரடியாக பேய் வந்து அடிக்கவுமில்லை,கடவுள் வந்து காக்கவுமில்லை.இதைத்தான் மருத்துவ மனைகளில் மனோத்த்துவ முறையில். உரிய சிகிச்சைக்கு பின் -விளைவுகளில்லா வண்ணம் குண-மடையச்செய்கின்றனர்.அதே முறையில் தான் மதரீதியான பிரார்த்தனை நடக்கும் இடங்களில். மாற்றம் பெறுகின்றனர். என்றாலும் இவர்களை துன்புறுத்துவதன். விளைவாக நலம் பெறக்கூடியவர்-கள் கூட மேலும் அதிகரித்து தீராத அளவிற்கு விட்டுவிடுகின்றனர்.    ஒவ்வொரு. உயிரும் தன்னுயிரை காக்க உடல் மூலமாக ஏற்படும் முன்னெச்சரிக்கையின் அறிகுறியே. அச்சம்,பயம்,என்பதாகும்.இவை மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு. பிறந்த குழந்தைக்கும் உண்டு.இவர்கள். வளர வளர தைரியத்தை ஊட்டி வளர ச்செய்வது தான் பெரியவர்களின் கடமையே அல்லாமல் அச்சத்தை ஊட்டி வளர செய்வது மிருகங்கள் கூட செய்வது கிடையாது.ஆத்மா என்பது எது?பிறக்கும் பொழுது சிசுவின். உடலில் சென்று விடுவதும்,விட்டுபிரியும் பொழுது,உயிர் பிரிந்து விடுவதுமாக. கூறப்படுவதுமாகும்.அதாவது கை,கால்களைத்தவிர எந்த குறையு-மில்லா ஒரு உடம்பினுள் இருப்பது தான் ஆத்மா என்கிறார்கள்.அந்த உடம்பினுள். ஏதாவது பிழை ஏற்பட்டால்,செயல் இழந்தால்,அந்த பிழையை சரி செய்து அந்த உடலிலேயே தங்கலாம் என்ற அறிவு எல்லாம் அந்த ஆத்மாவுக்கு இல்லை மாறாக கோபம் கொண்டு சென்று,இந்த நாள் வாழ்ந்தோம் என்ற நன்றி. விசுவாசமில்லாமல், அந்த உடலை பூத உடலாக்கி செல்வதாக. காலம் காலமாக கூறப்படுவதாகும்.அதாவது மின்விசிறிகள் உள்ளது,அதில் இறகு,காயில்,பேரிங்,மற்றும் இதர சாதனங்கள் ,மின்சக்தி,எல்லாம் சேர்ந்தால். இயங்கக்கூடிய சக்தி கிடைக்கின்றது .அப்படி என்றால் ஆத்மாவை இந்த இயந்திரத்தில். மனிதர்கள் புகுத்துகின்றனரா? ஆக இயந்திரத்தில். மின்சக்தி,இதர சாதனங்கள் ஒன்று சேர்ப்பதனால் ஒருசக்தி தோன்றி தானாக இயக்கம் பெறுகின்றன.அதுபோல தானியங்கி என்ற மனித உடலில் ,தானாக உருவாக்கி இனைந்து ,வளரந்து ஒரு சக்தியை உருவாக்கி அந்த உயிரை இயக்கவும் ,ஏதாவது பழுதுபட்டால் தன்னால் முடிந்த வரை சரி செய்ய முயன்று,முடியாத தருவாயில் தன் சக்தியை இழந்து,வெளி உயிரை மரணம் என்று மனிதர்களை கூற வைத்து அவ்வுடலுடன் தானும் மரணம் அடைகிறது.

Saturday, 21 February 2015

இயற்கை.என்பது நம் கண்முன்னால் தெரிவது நடந்ததாகும்.அது நல்லதா-கவுமிருக்கலாம் ,தீமையாகவுமிருக்க-லாம்.இதனால் நன்மை உண்டானால் பலனடைவதும்,பலராகயிருக்கும். இதனால் தீமை உண்டானால் அழிவ-தும் பலராகயிருக்கும்.கடவுள் நம்பிக்கை என்பது இயற்கைக்கு நேர் -மாறானது.தனி ஒருவனை சார்ந்து உருவாக்கப்பட்டது .பொதுப்படை-யாக உருவாக்கப்படவில்லை ,பொதுப்படைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை, என்பதை நாம் புரிந்து. கொள்ள வேண்டும்.கடவுளை வணங்கினால். உனக்கு நண்மை ,இல்லை என்றால் கடவுளை நம்பும் பொதுமக்களால் உனக்கு தீமை என்றாக்கப்பட்டதா-கும்.தெய்வநம்பிக்கை மனிதனால் கேட்டால் கொடுப்பது ,கேட்டுகாவிட்-டால் கை விடுவது என்று உருவாக்க-பட்டது.ஆனால் இயற்கைக்கு இவை-கள் தெரியாது,இவன் கேட்பவன் . மற்றவன் கேட்காதவன் என்று பாகு-பாடுகள் அறியாதவை,பாவம்,புண்-ணியம். தெரியாதவை,நல்லதும் செய்யும் ,தீமையும் செய்யும்,உதார-ணமாக ஒரு நல்லவன் செடியை வளர்த்தாலும் வளரும்,தீயவன். வள-ர்த்தாலும் வளரும்,இல்லை யாரும் வளர்க்கவில்லை என்றாலும் வளரும் பின் அழியும்.அதே போல் காற்று இதன் உதவியால் உயிரினங்கள் ,தாவரங்கள்,நல்லவர்கள்,தீயவர்கள் என்று எல்லோரும் வாழ்கின்றனர். ஆனால் அதே காற்று தன்னால் வாழ்-ந்தவைகள். நல்லவர்கள் ,தீயவர்கள் என்று பாராமல் சூறாவளி என்ற பெயரால் அழிக்கவும் செய்கிறது. அதேபோல் தண்ணீர் வாழ்வாதாரம் எனும் நிலையில் எல்லா உயிரினத்-தையும் வாழ வைக்கவும் செய்கிறது. அதே தண்ணீர் நாம் வாழ வைத்த உயிரினம் என்று அறியாமல் வெள்-ளம் எனும் பெயரில் அழிக்கவும்  செய்கிறது.ஆக இவைகளால் வாழ்-வதும் பல  ,அழிவதும் பல, என்ற தன்மைகள் கொண்டவைகள்.  ஒருவனையோ.அல்லது ஒரு குடும்-பந்தையோ. பார்பதோ கவனிப்பதோ ,நல்லது செய்கிறானா?கெட்டது.  செய்கிறானா?என கவனிக்கும் வேலைகளை செய்யாது,இயற்கை-க்கு தெரியாது.                                    இயற்கை யாருக்கும் எதையும் நிரந்-தரமாக வைத்துக்கொள்ள இடம் கொடுப்பதே இல்லை.இந்நிலத்தில் இருந்து கொடுப்பதை கழிவாக மறு பொருளாக திரும்ப பெற்றுக் கொள்கிறது.மிருகமோ,அல்லது மனிதனோ எவ்வகை உணவாக ருசியாக உட்கொண்டாலும் அதை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது அதை கழிவாக வெளி-யேற்றித்தான் ஆகவேண்டும். அப்பொழுது தான் வாழ முடியும், வளர முடியும்.அதாவது பசி என்ற ஒன்றை உயிரினங்களுக்கு உண்டாக்கி விட்டு அதை எவ்வகை-யிலும் பசியை அடக்கும் நிலையை, செய்து விட்டு,அவ் உணவின் வழியால் உட்புற இயற்கை தனக்கு தேவையான சக்திகளை பெற்றுக்-கொண்டு ,அதை அந்த வெளி உயிர் தக்க வைத்துக் கொள்ளாத வகையில் வயிற்றில் வேதனையை உருவாக்கி கழிவை வெளியேற்ற வைத்து விடுகிறது.இவ்வகையில் தான் ஒவ்வொரு உயிரினமும் வாழ்கின்றன .மண்ணில் விழும் உயிரினங்களின் கழிவுகள் மடியும் பூச்சிகள் மண்ணிற்கு உணவாகும். உரமாகவும் மாறி ,மண்ணின் தண்மை கொண்டு உணவாக வாழும் தாவரங்கள் கழிவுகளாக இலைகளையும் கனிகளையும் ,தானியங்களாக ,வெளியேற்றி வாழும் இனமே நாம் உண்ணும் நெல், கோதுமை,பழங்கள்,கீரைகள் என்பவைகள்.ஆக இதுவும் ஓர் சூழற்சியே, இயற்கையால் விளைந்த எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.                                    இயற்கை ஒவ்வொன்றுக்கும் தன்-னிச்சையாக வாழ,மூளை என்ற சக்திகொண்டு தன்னைத்தானே காத்துக் கொள்ள,வளர்த்துக் கொள்ள இனவிருத்தி செய்து கொள்ளவென்று உருவாக்கியவை தான் உயிரினங்களாகும்.இவைகள் குறுகிய. காலத்தில் பருவ நிலை. அடைந்துதானே தன் இன உயிர். அணுக்களை உற்பத்தி செய்து தன் இனத்துணையைத்தேடி ,சேர்த்து விட -துடிக்கும். ஒரு இனமாகவும் மற்ற இனமோ,தன்இன உயிர்அணுக்-களை சினையாக சேர்த்து துணை-யிடமிருந்து பெறத்துடிக்கும் மற்றொரு இனமாகவும் செய்து இணைந்து விடும் தாயினமாகவும் ,தன்னைத்தானே வளர்த்துக்-கொள்ள உதவி செய்யும் தாயினம் முழுமையாக வளர்ந்து வெளியேறும் சேயாக. விளங்குபவைகளே உயிரி-னங்களாகும்.                                    உயிரினங்களை ஆட்டிப்படைப்பது மூளை எனும் சக்தியேயாகும்.இது உருவாகும் பொழுது பாதுகாப்பு. அரணாக ஓடுகளை வைத்து அதன். நடுவே பாதுகாப்பாக இருந்து. கொண்டு உலகைப் பார்க்க. வெளி. உணர்வுகளை கண்டு கொள்ள. கண் -களை வெளியில் வைத்து அதன் மூலம் அறியும் தண்மை கொண்டு காதுகளை வெளியில் வைத்து. கேட்கும் சக்திபெற்று ,சுவாசம் என்று மூக்கும் உணவு உட்கொள்ள வாய் என்றும் இவைகளை தன் அருகில் வைத்துக்கொண்டு உடல் எனும். இயந்திரம் கொண்டு வாய்க்கு. ஆகாரம் கொண்டு செல்ல கைகள். ஆகாரம் அரைக்க,கழிவுகளை அகற்ற இனவிருத்தி. செய்ய இந்த உடலையும் நகர்த்த கால்கள் என்று. உருவாக்கியது. தான் மனிதனின். இயற்கை என்பது தொழிற்சாலை போன்றது ,அங்கே உற்பத்தியாகும். வாகனங்கள் தான் நாம் இந்த. வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் மூளை. இந்த ஓட்டுநர் எந்த வகையில் வாகனம் எனும் இந்த உடலை இயக்குகிறானோ அந்த வகையில். வாகனங்களின் தன்மைகள் அமைந்து விடுகின்றன .ஆக கண்ணால் பார்த்த மாத்திரத்தில் கையை உடனே இயங்க வைப்பதும் காலை நகர வைப்பதும் வழி நடத்தி செல்வதும் மூளை எனும் ஓட்டுநரின் கைவண்ணமே,இவர் என்றும். கடவுளாக முடியாது .கட்டுப்படாத உற்பத்தியை பெருக்குவதும். குறிப்பிட காலத்தில் அழிந்து போவதும் தான் உயிரினங்களின் நியதி.

Friday, 20 February 2015

உலகம் தோன்ற ஆதி மூலம் எதுவென்றால் சூரியன் தான் இது என்றும் கடவுளைப் போல் ஒளிந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றும் பொருளாக இருந்ததில்லை .உலகில் உள்ள எந்த உயிரும் பார்க்கும் வண்ணம் தன்னை வெளிப்படுத்தி உலகம் இயங்க உயிர் நாடியாக விளங்கி வருகிறது.இதுவே முதன் முதலாக தோன்றி மற்றவைகள் உருவாக காரணகர்த்தாவாக இருந்துள்ளது.இதிலிருந்து விலகி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவைகள் தான்மற்ற கோள்களும் ஆனால் எந்த கோள்களிலும் ஏற்படாத உருவாகாத திரவம் பூமியில் உருவானதின் விளைவால் மற்றும் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் சரியாக அமைந்து விட்டபடியாலும் காற்று தண்ணீராக. பரவி அதன் விளைவாக நுண்ணுயிர்கள் தோன்றி  அந்த நுண்ணுயிர்கள் பல வடிவங்களில் உருமாறியதன் விளைவாக ,அதாவது நுண்ணுயிர்கள் கூட்டு கலவையாகி பல உருவங்களாக உருவாகி பரிணாமங்கள் அடைந்தவைகளே .இவ்வகையாக தாவரங்கள் என்றும் உயிரினங்களாகும் மனிதயினமாகவும் தன்னைத்தானே வடிவமைத்து உருவாக்கி வெளிவந்து உயிரினங்களாக உலா வருகின்றன.                                       இந்த உலகம்.   உருவாக கடவுளே.  காரணம் அவரே எல்லாவற்றையும். உருவாக்கினார் என்பது மதவாதிகளின் கருத்தாகும்.அதா-  வது இதை இயக்க மாபெரும் சக்தி உள்ளவனால் தான் இதை இயக்க முடியும் என்று மனித அறிவைப் போலவே கடவுளும் அறிவை பயன் படுத்தி இயக்குகிறான் என்பது அவர்களின் நம்பிக்கை?எல்லாவற்றையும் உருவாக்க ஒரு மாபெரும் சக்தி (கடவுள் )வேண்டும் என்றால் அது மட்டும் எவ்வாறு ஒன்றுமில்லாமல். உருவாக முடியும்.அதாவது பலதையும் உண்டாக்க கூடிய ஒருவன் பலதையும் படைக்க கூடிய ,பலம் படைத்த ஒருவனுக்கு,அந்த பலத்தையும்,சக்தியையும் கொடுக்க அந்த சக்தியை விட பலம் கொண்ட சக்தி எது?அதற்கு விடை இல்லை, தேவை இல்லை என்பது அவர்களின் கருத்து ஆக முதலில் இல்லை என்பதில் தொடங்கி தானாக கடவுள் உருவானார் என்பதில் ஆத்திகம் வாதிகளுக்கும் மாற்று கருத்து இல்லை,ஆனால் எதுவுமே இல்லாமல் ஒரு மாபெரும்  சக்தி கொண்ட ஒரு ஆற்றல் உருவாக சாத்தியக்கூறுகள் இல்லை என்பது அறிவியல் கூற்று,பால்வெளி அண்டங்கள் என மனிதனுக்கு தேவை இல்லாத அந்த மனிதனைப் படைத்ததாகவும் கூறப்பட்ட கடவுளுக்கும் தேவையில்லாத்தாக. கருதி மனிதர்களிடம் கூறாது, கடவுளை வைத்து விவாதம் செய்வது மனிதன்,கடவுளும் அறிவுரை வாழ்வியல்விதிகள் என்று மனிதனு-க்கு மட்டுமே விதிக்கிறான் . சொர்க்கம்-நரகம் என்று மனிதர்களை மிரட்டுகிறான் ஏன்?மனிதனை மட்டும் சிறந்ததாக ஏன்படைக்கிறான். மற்றவைகளை. மனிதனை விட கீழாக படைத்ததால். கடவுளுக்கு என்ன மனநிறைவு கிடைத்து விட்டது.என்றால் நிச்சய-மாக கடவுள் எனும் பேருக்கு இல்லை மாறாக கடவுள் எனும் பெயரை வைத்து . மனிதன் தனக்கு தானே உயர்வாக நிலைநிறுத்திக்கொள்கி-றான் .பூமிக்கு ஆதரவு சூரியன் நமக்கு ஆதரவு இந்த பூமி,இந்த பூமியை விட்டு வேறு கோள்களில் நமக்கு உண்டான காற்று இல்லை,உணவு இல்லை, நாம் உரையாட மனிதர்கள் இல்லை என்றாலும் நமக்கு தேவையில்லாத -வைகளாகயிருந்தும் நமக்கு எந்த நன்மைகளும் செய்யாமலே சுழன்று கொண்டு தான் இருக்கின்றது.நம் பூமிக்காவது நன்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.நமக்கு கடவுள் தேவை என்றால் மற்ற கோள்களுக்கு எதற்கு கடவுள் தேவை,மற்ற கோள்களுக்கு கடவுள் தேவையில்லை என்றால் நம் பூமிக்கு. மட்டும்,அதுவும் மனிதர்களு-க்கு மட்டும் கடவுள் தேவை என்பது மனிதர்கள் உண்டாக்கிய சதியே-அன்றி வேறில்லை.                        இயற்கை என்பது ஒரு சுழற்சி. ஒரு இயக்கம்.ஒன்று இயக்குவது,மற்-றொன்று தானே இயங்கி கொள்வது இயற்கை தன்னால் உருவான ஒரு பொருளையும் தானாக உருவாகும் தன்மையை கொடுக்கும்,அது சரியாக உருவாகியிருக்கிறதா?அல்லது தவறி விட்டதா என்று கடவுள் கவனித்துக்கொன்டுள்ளது என்று மதவாதிகள் கூறுவது போல்,இயற்கை செய்யாது,அறியாதது ,ஒன்றினால் ஒன்று உருவாகி பல்கி பெருகி சிறிய உயிரினம்,பின் கூட்டு கலவையாகி பெரிய உயிரினமாக விளங்குகிறது ,சிறிய உயிரினமாக உள்ள போது இனவிரு-த்தி அதிகமாகவும் பெரிய உயிரினமாக உள்ள போது இன் விருத்தி சிறிய அளவிலும் செய்து உணவுகளாக ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வழி செய்து கொண்டு வளர்கிறது,இதில் தாவர உயிரினம் மிகச்சிறிய ,சிறிய ,அதை விட பெரிய,என்று பலவகை அளவிலும் உயரம்,காலம் என தனக்குள்ளே ஒரு வரைமுறை வகுத்துக்கொண்டு வாழ அந்த உயிரை பயன்படுத்திக்கொள்-கிறது.இதில் புறவழி அறிதல் சிறிது அதிகமாக மனிதன் இருந்த காரண-ந்தால் அதை வைந்து தன்னைத்தானே ஒவ்வொரு வழிகளையும் அறிந்து அதில் சிறிது சிறிதாக விலங்கினத்திலிருந்து விலகி முன்னேற வழிகளையும்,வழி-முறைகளையும் அமைந்துக்கொண்-டான்.                                                 ஆரம்பகாலத்தில் தோன்றிய உயிரினங்கள் தோற்றங்கள் உடலமைப்பு அவற்றின் இயக்கங்களின் தன்மைக்கு ஏற்ப வாழ்நாட்களை ஆயுளாக கொண்டன .அவ்வாறு தோன்றிய உயிரினங்கள் ஆண்-பெண் என்ற இரு இனங்களாகத்தான் தோன்றியது என்றும் கூறமுடியாது.ஒரே இனமாக இருந்து தானே கருவுற்று,பெற்று,வளர்த்து,பின் வந்த காலங்களில் அவைகளுக்கு இரண்டு இனங்களாக பிறந்து பின் வளர்ந்து இனச்சேர்க்கை. செய்து வளர்ந்த இனங்களாகியிருக்கின்றன இன்றுள்ள தாவரங்கள் மண்புழுக்-கள் துணையின்றி. தன் இனப்பெரு-க்கம் செய்கின்றன.தாயும் ,தந்தை-யும் அதுவே வரும் காலங்களில் இவைகளும் இரு இனங்களாக பிரியலாம்  ,பிரியாமலுமிருக்கலாம் கூறமுடியாது.ஆக ஆண் துணை தேவை ஏற்படாத வகையில் பெண் வடிவிலான உயிரினங்களாகத்தான். உலகில் முதன் முதலாக தோன்றி இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.